ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி: ஜூன் 1-15 வரையில் மளிகை கடைகளின் செயல்பாடு 28% அதிகரிப்பு


ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி: ஜூன் 1-15 வரையில் மளிகை கடைகளின் செயல்பாடு 28% அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 5:20 AM GMT (Updated: 23 Jun 2021 5:20 AM GMT)

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-15 வரையில் மளிகை கடைகளின் செயல்பாடு 28% அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. காய்கறி, மளிகை கடைகள், பிளம்பிங் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் இந்த கடைகள் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டன. அழகு நிலையங்கள், பேன்சி கடைகள், ஜெராக்ஸ், காலணி கடைகள் உள்ளிட்ட அனைத்து சிறிய கடைகளும் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1-15 வரையில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை 15% அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் மளிகை கடைகளின் விற்பனை 28% அதிகரித்துள்ளதாக விசாக் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 

இந்தியாவில் உள்ள 75 லட்சம் மளிகடைகளின் விற்பனை அளவுகளை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. இனிப்புகளின் விற்பனை கடந்த 6 மாதங்களில் இல்லாதா அளவுக்கு ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வீடுகளை சுத்தப்படுத்தும் பொருட்களின் விற்பனை 12%  அதிகரித்துள்ளது. பாக்கெட் உணவு பொருட்களின் விற்பனை 7% அதிகரித்துள்ளது. 

ஆனால் குளிர்பான விற்பனை மட்டும் மார்ச் மாத விற்பனையை விட 3% சரிந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story