மாநில செய்திகள்

தேனி, திண்டுக்கல், உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + 5 districts including Theni, Dindigul Chance of heavy rain in delta districts Meteorological Center

தேனி, திண்டுக்கல், உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தேனி, திண்டுக்கல், உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை ,திருப்பூர், தேனி ,திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

27ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் ஒரு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வென்றது திண்டுக்கல்
கோவை கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹரி நிஷாந்த், மணி பாரதி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது.
3. தேனியில் நிலுவை தொகை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
தேனியில் நிலுவை தொகையை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
4. தேனியில் பரபரப்பு: போலீஸ்காரரின் தந்தைக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி...
தேனியில் போலீஸ்காரரின் தந்தைக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.