டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வீரியமிக்கது; அமைச்சர் மா. சுப்பிரமணியன்


டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வீரியமிக்கது; அமைச்சர் மா. சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 24 Jun 2021 5:32 PM GMT (Updated: 24 Jun 2021 5:32 PM GMT)

டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வீரியமிக்கது என்றாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நர்சு ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  இதுபற்றி தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, சென்னையில் நர்சு ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளித்து தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.  வேறு யாரேனும் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று சோதனை செய்து வருகிறோம். இந்த தொற்று வீரியமிக்கது என்றாலும் தொடர் சிகிச்சை அளித்தால் அதனை குணப்படுத்தலாம். ஆகவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியது இல்லை.

அதேபோல வெளிநாடுகளில் இந்த வைரஸ் பரவிய போது கூட தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். டெல்டா பிளஸ் குறித்து மருத்துவ வல்லுனர்கள் தொடர் ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையத்திலும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.

ஏற்கனவே வெளிநாட்டு விமானங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. மீண்டும் விமான சேவை தொடங்கினாலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story