திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்
x
தினத்தந்தி 25 Jun 2021 12:56 PM GMT (Updated: 25 Jun 2021 12:56 PM GMT)

தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, திமுக முதன்மை செயலாளர் கேஎன் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக மாவட்ட செயலாளர்கள் 77 பேரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

தேர்தலுக்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

Next Story