தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படைக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்


தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படைக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 25 Jun 2021 5:12 PM GMT (Updated: 25 Jun 2021 5:12 PM GMT)

பா.ம.க. இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களப் படையினரின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு இனியும் பொறுத்துக்கொண்டிருக்கக் கூடாது. சிங்களப் படையினரின் தாக்குதலில் நல்வாய்ப்பாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பி விட்டாலும் அவர்களின் படகு சேதமடைந்து விட்டது. சிங்களப் படையினரின் இந்த செயலை இந்திய அரசு கண்டிப்பதுடன், சேதமடைந்த படகு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story