மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் - செல்லூர் ராஜூ நம்பிக்கை + "||" + Local elections: AIADMK will get majority support in Madurai district - Sellur Raju hopes

உள்ளாட்சி தேர்தல்: மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் - செல்லூர் ராஜூ நம்பிக்கை

உள்ளாட்சி தேர்தல்: மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் - செல்லூர் ராஜூ நம்பிக்கை
உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்று செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை,

இது குறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

''உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல அதிமுக வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறோம். நிச்சயமாக அதிமுக, மதுரைக்கு ஏராளமான திட்டங்களைத் தந்துள்ளது. அந்த திட்டங்கள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. அதன் காரணமாக மதுரை அதிமுகவுக்கு மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கிடைப்பார்கள். இதனால் உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக அரசு அமைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மகளிருக்கு ரூ.1,000 நிதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.

அதிகரித்துள்ள விலைவாசியை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த மக்கள் குழுமி வருகிறார்கள். அதனைத் தடுக்க வேண்டும். டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்
சமீபத்தில் கூட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
2. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
4. ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
5. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை; மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.