மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மீண்டும் சரிவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மீண்டும் சரிவு
x
தினத்தந்தி 30 Jun 2021 3:28 AM GMT (Updated: 30 Jun 2021 3:28 AM GMT)

நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது.

சேலம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 86.16 அடியிலிருந்து 85.35 அடியாக சரிந்தது.

அதே சமயம் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 5,130 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 47.49 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story