மாநில செய்திகள்

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது - ஐகோர்ட் மதுரைக் கிளை + "||" + Can't ban the so-called United Government - High Court Madurai branch

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது - ஐகோர்ட் மதுரைக் கிளை

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது - ஐகோர்ட் மதுரைக் கிளை
மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.
மதுரை

தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் உள்ளிட்டவற்றில், ஒன்றிய அரசு என பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்  மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள நிலையில், இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். 

மதுரை கிளை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட முடியாது. மேலும் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதனைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் என தெரியவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்திருப்பது மகிழ்ச்சி; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
2. தடுப்பூசிகள் ஏற்றுமதி: இந்தியாவின் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
மீண்டும் தடுப்பூசி உற்பத்தி ஏற்றுமதி செய்யும் இந்திய அரசின் முடிவை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.
3. லே நகரில் புதிய விமான நிலைய முனையம் 2022- இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: மத்திய அரசு
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய விமான நிலைய முனையம் செயல்பட்டுக்கு வரும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
4. தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும்; மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
5. போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
போர்டு நிறுவனத்தின் முடிவு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.