அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்!


அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்!
x
தினத்தந்தி 1 July 2021 4:01 PM GMT (Updated: 1 July 2021 4:01 PM GMT)

இந்தியாவில் ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம்.

சென்னை,

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டது தான், மருத்துவர் தினம். ‘உலக மருத்துவ தினம்’ என்று இருந்தாலும், ‘தேசிய மருத்துவ தினம்’என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது நாட்டுக்கு நாடு மாறுபாடு கொண்டதாக இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்த தினத்தை பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றன. 1991-ம் ஆண்டு முதல் டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவைப் போற்றும் வகையில் இந்தியாவில் ‘தேசிய மருத்துவர் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் மருத்துவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் தலைவர் கமல்ஹாசன் இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில்,

பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து தன்னலமற்ற சேவை ஆற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியம் வழங்கி இருப்பது ஏமாற்றமளிக்கிறது.  இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவமனைகளில் கருத்தில் கொண்டு அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

Next Story