மாநில செய்திகள்

சமையல் எரிவாயு விலை உயர்வு; எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? - கமல்ஹாசன் + "||" + Rising cooking gas prices; When will all this come to an end? - Kamal Haasan

சமையல் எரிவாயு விலை உயர்வு; எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? - கமல்ஹாசன்

சமையல் எரிவாயு விலை உயர்வு; எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? - கமல்ஹாசன்
சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழிகத்தில் நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையும் 25 ரூபாய் அதிகரித்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? என்று பதிவிட்டுள்ளார்.