விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 2 July 2021 2:15 PM GMT (Updated: 2 July 2021 2:15 PM GMT)

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜெயலலிதாவின் அரசு கடந்த ஆண்டு குறித்த நாளில், அதாவது ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு பயனடைந்தனர். அதுபோல, இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயி சேற்றில் கால் விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்த ஜெயலலிதாவும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகளை அளித்து வேளாண் பெருமக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது. தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும், குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடையதுள்ளதாக செய்திகள் வருகின்றன.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, வரகூரைச் சேர்ந்த விவசாயி வீரமணி தனது 9 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கரில் தனியாரிடம் இருந்து ஏ.டி., 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள 2 ஏக்கருக்கு, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும் திமுக அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்று விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடையத விவசாயி வீரமணி, வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படையதுள்ள விவசாயி வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

அதே போல், வேறு எங்கேனும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் மிகுயத விழிப்புணர்வோடு, தரமான விதை நெல்களை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story