மாநில செய்திகள்

கூடங்குளம் 5-வது அணு உலை பூர்வாங்க பணிகளை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் + "||" + Koodankulam 5th nuclear reactor should be abandoned: K. Balakrishnan

கூடங்குளம் 5-வது அணு உலை பூர்வாங்க பணிகளை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

கூடங்குளம் 5-வது அணு உலை பூர்வாங்க பணிகளை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

எனவே கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் 1 மற்றும் 2 ஆகிய அணு உலைகளை தவிர்த்து, 3, 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் தற்போது துவங்கப்பட்டுள்ள 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகளையும் மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்தகைய பணிகளை நிறுத்துவதற்கான 
அனைத்து முயற்சிகளில் தமிழக அரசும் இணைந்து நிற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.