மாநில செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை பெய்யும் + "||" + Atmospheric overlay circulation; It will rain in 16 districts

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை பெய்யும்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் தற்போது காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தவிர வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், வேலூர் உட்பட 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் படகு விபத்தில் 3 பேர் பலி; 89 பேர் மீட்பு
அசாமில் படகு விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 89 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
2. டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிவு
டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.
3. காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றம்: வெள்ளை மாளிகை
ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
4. டெல்லி, உ.பி.யில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. டெல்லியில் 3 மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை; முக்கிய சாலைகள் மூடப்பட்டன
டெல்லியில் அதிகாலை வேளையில் 3 மணிநேரம் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் மூடப்பட்டு உள்ளன.