மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு பார்சல்களில் வந்த சிலந்திகள் + "||" + Spiders sent to Chennai Airport in parcels

சென்னை விமான நிலையத்திற்கு பார்சல்களில் வந்த சிலந்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு பார்சல்களில் வந்த சிலந்திகள்
சென்னை விமான நிலைய தபால் பிரிவிற்கு, சிலந்திகள் பார்சல்களில் மறைத்து வைத்து அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய பார்சல்களில் முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தின் தபால் பிரிவிற்கு வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது போலந்து நாட்டில் இருந்து வந்த பார்சலில், 107 மருத்துவ குப்பிகளில் சிலந்திகள் மறைத்து அனுப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை சிலந்திகள் வட, மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோ நாட்டிலும் வாழக்கூடியவை என்று தெரிய வந்துள்ளது. இந்த சிலந்திகளை போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பார்சல்கள் யாருக்கு வந்தவை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2. சிறிய சிலந்திகள்
சிலந்தி சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து வாழ்ந்து வருகிறது. 42 ஆயிரம் சிறிய சிலந்தி பூச்சி வகைகள் உலகில் உள்ளன.