மாநில செய்திகள்

கொந்தகையில் அகழாய்வு: ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு + "||" + Excavation in the gorge: 5 more human skeletons found in one place

கொந்தகையில் அகழாய்வு: ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கொந்தகையில் அகழாய்வு: ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
கொந்தகையில் அகழாய்வு: ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-வது கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பணி, ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது.கொந்தகையில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த வாரம் மனித எலும்புக்கூடு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முழு உருவ மனித எலும்புக்கூடு கிடைத்தது. இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நேற்றும் அதே இடத்தில் தொடர்ந்து நடைபெற்றன. இதில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் ஆணுடையதா, பெண்ணுடையதா என தெரிய வரும். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர்களுடையது என்பதும் தெரிய வரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.