மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு + "||" + Minister Sekarbabu inspects the Thiruchendur Subramania Sami Temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் வந்தனர். பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.


கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். இக்கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும். அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவுப்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

வைகுண்டபதி பெருமாள் கோவில்

பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராணிமகாராஜபுரம் பகுதியில் உள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நயினார்பத்து பகுதியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் பார்வையிட்டனர்.

முன்னதாக, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலங்கள் சென்னையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நேற்று மீட்கப்பட்டது.
2. கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய நகைகள் மூலம் வருவாய் ஈட்ட முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
3. கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன் அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
கட்சியில் சிலர் துரோகம் செய்துவிட்டதாகவும், தபால் ஓட்டுகளால்தான் வெற்றிபெற்றதாகவும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
4. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள்: பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவருவதால் பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டங்களை குறைக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
5. பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி தனது காரிலேயே மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.