மாநில செய்திகள்

‘‘கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவது அராஜகம்’’ சசிகலா பேச்சு + "||" + ‘‘ Removing volunteers from the party is anarchy ’’ Sasikala talks

‘‘கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவது அராஜகம்’’ சசிகலா பேச்சு

‘‘கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவது அராஜகம்’’ சசிகலா பேச்சு
‘‘கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவதை ஏற்க முடியாது. இப்படி அராஜகம் செய்யக்கூடாது.’’ என்று தொண்டர்களிடம் சசிகலா பேசியுள்ளார்.
சென்னை,

சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்தவகையில் திருவாரூரை சேர்ந்த சரவணன், அபுதாகீர், ராணிப்பேட்டையை சேர்ந்த கண்ணதாசன், தேனியை சேர்ந்த கண்ணன், பொள்ளாச்சியை சேர்ந்த முருகவேல், கோவையை சேர்ந்த நாகராஜ் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார்.


அதன் விவரம் வருமாறு:-

நிச்சயம் நல்ல நிலைமைக்கு கட்சியை கொண்டு வருவேன்.

நான் சிறையில் இருந்த காலத்துல தொண்டர்களின் கடிதம்தான் எனக்கு சின்ன ஆறுதலா இருந்துச்சு. காயத்துக்கு மருந்து மாதிரி இருந்துச்சு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயம்கூட, தொண்டர்களின் வேண்டுதலால்தான் நான் மறுபிறவியே எடுக்க முடிஞ்சது. தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.

அராஜகம்

தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்சு கிடந்த 2 அணிகளையும் எப்படி ஒண்ணு சேர்த்தோமோ, அதுமாதிரி இப்பவும் கட்சியை சரிபண்ணிடுவோம். தொண்டர்கள் என்கூட இருக்காங்க. எனவே யார் என்ன செஞ்சாலும் அதைப்பற்றி கவலையே படமாட்டேன்.

கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்கிட்டே போறத ஏத்துக்கமுடியாது. இப்படி அராஜகம் பண்ணக்கூடாது.

ஊரடங்கு முடிந்ததும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன் அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
கட்சியில் சிலர் துரோகம் செய்துவிட்டதாகவும், தபால் ஓட்டுகளால்தான் வெற்றிபெற்றதாகவும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
2. நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம்
நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினேனா? என்பது குறித்து சசிகலா பதில் அளித்துள்ளார்.
3. ‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு
‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு.
4. தொண்டர்கள் துணையுடன் அ.தி.மு.க.வை மீட்பேன் சசிகலா பேச்சு
தொண்டர்கள் துணையுடன் அ.தி.மு.க.வை மீட்பேன் சசிகலா பேச்சு.
5. ‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு
‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு.