மாநில செய்திகள்

முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் + "||" + Stalin bicycle trip for the first time since taking office as CM

முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்

முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்
முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, அவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார். அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதையும், செல்ஃபி எடுப்பதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருப்பார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த இடங்களில் வழிநெடுக போலீசார் பின்தொடர்ந்து பாதுகாப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த ஸ்டாலின், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களை நேரடியாக வாங்கி, குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களை நேரடியாக வாங்கி, குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்.
2. திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3. மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை; எடியூரப்பா திட்டவட்டம்
மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5. ஊரடங்கு தளர்வுகள்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.