மாநில செய்திகள்

தூத்துக்குடி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் மின்தூக்கி இயந்திரம் - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார் + "||" + Kanimozhi MP inaugarates new lift costing 50 lakhs in Thoothukudi Hospital

தூத்துக்குடி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் மின்தூக்கி இயந்திரம் - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் மின்தூக்கி இயந்திரம் - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்தூக்கி இயந்திரத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் 50 லட்ச ரூபாய் செலவில் புதிய மின்தூக்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மக்களவை தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையில் வல்லுனர் குழுவை அமைத்து அந்த சிக்கலை போக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு பொதுமக்களிடம் வாங்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.