பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் - அமைச்சர் நாசர் தகவல்


பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் - அமைச்சர் நாசர் தகவல்
x
தினத்தந்தி 4 July 2021 6:13 AM GMT (Updated: 4 July 2021 6:13 AM GMT)

பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை மையங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, சேலம் ஆவின் பால் பண்ணையிலும் ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், தற்போது ஆவின் நிலையத்திற்கு பால்வரத்து 1.5 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதேபோல பால் விற்பனையும் 1.5 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், பால்விலை குறைப்பால் அரசுக்கு 270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் கடந்த ஆட்சியில் 234 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் நாசர், கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டற்கான ஆதாரம் உள்ளது என்றும் விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Next Story