பட்ஜெட்

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்: தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் + "||" + Separate Budget for Agriculture Department Meeting chaired by Chief Secretary

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்: தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்: தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை,

திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலும் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. தமிழகத்திற்கான பொது பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வேளாண் துறைக்கும் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இதற்கு தயாராகும் வகையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வேளாண், உணவு, கால்நடை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விளைப்பொருட்காளுக்கான சந்தை வசதியை முறைப்படுத்துதல், லாபகரமான விலைக்கு உத்தரவாதம், மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதி, பாரம்பரிய விவசாய முறைகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் துறைக்கு, ‘அறுவடைக்கு பிந்தைய புரட்சி’ தேவை: பிரதமர் மோடி
வேளாண் துறைக்கு அறுவடைக்கு பிந்தைய புரட்சி தேவைப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.