மாநில செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது: சசிகலா + "||" + No one can claim privacy for AIADMK: Sasikala

அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது: சசிகலா

அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது: சசிகலா
அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது. இது தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி என்று சசிகலா பேசியுள்ளார்.
சசிகலா பேச்சு
சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அந்தவகையில் திருப்பூரைச் சேர்ந்த கிரிதரன், நடிகர் குண்டு கல்யாணம், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையன், மதுரையைச் சேர்ந்த ராஜசேகரன், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜமுனாராணி ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் உரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது:-
கட்சியின் மீது அதீத பற்றுக் கொண்டிருக்கும் தொண்டர்கள் இருக்கும்வரை, அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது. இது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி. நிச்சயம் தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்தக் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி, அம்மா நினைத்தது போல நல்லபடியாக பெயர் வாங்கிக் கொடுப்போம். நிச்சயம் 
அதைச் செய்வேன். கட்சியை மீட்டெடுத்து நல்லாட்சி தருவேன்.

பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை
எனவே தொண்டர்கள் கவலைப்படவே வேண்டாம். நிச்சயம் நான் வருவேன். கட்சியை நல்லபடியாக வழிநடத்துவேன். ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து பகுதிகளிலும் உள்ள தொண்டர்களைச் சந்திப்பேன். தொண்டர்கள் மனசுபடி நான் நிச்சயம் செய்வேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இது தொண்டர்களின் கட்சி. இப்போது ஒரு சிலர் தவறான 
போக்கை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறு. எல்லா தொண்டர்களுக்கும் கட்சியில் உரிமை உண்டு. யாரும் மனதை விட்டவிட வேண்டாம். கட்சியில் பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை என்று எல்லாருமே சொல்கிறார்கள். எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம். எல்லாவற்றையும் சரி பண்ணிடலாம். நான் இருக்கேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக ஜெயலலிதா விட்டு சென்றுள்ளார்: சசிகலா
சசிகலா, தினமும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்த ஆடியோ பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த ரூபம் வேலவன் என்ற தொண்டரிடம் சசிகலா நேற்று பேசியுள்ளார்.
3. தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை -சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல்; 2011ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதும் கடன்சுமை இருந்தது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
4. அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
5. அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.