தமிழகத்தில் 25 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,715 பேருக்கு தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 July 2021 2:30 PM GMT (Updated: 5 July 2021 2:30 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,00,002 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 54 பேர் (அரசு மருத்துவமனை - 35 பேர், தனியார் மருத்துவமனை - 19 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 4,029 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,32,017 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 34,926 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 436 பேருக்கும், ஈரோட்டில் 330 பேருக்கும், சேலத்தில் 233 பேருக்கும், தஞ்சாவூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 217 பேருக்கும், சென்னையில் இன்று மேலும் 214 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 028 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story