மாநில செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை - தமிழக காவல்துறை + "||" + Action against those who spread slander on social networking sites - Tamil Nadu Police

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை - தமிழக காவல்துறை

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை - தமிழக காவல்துறை
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, 

சிலர் சுய விளம்பரத்திற்காக சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடுகின்றனர். சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக ஊடகங்கள்/பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை தூண்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இத்தகைய
அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்ற செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.

காவல் துறையை பொறுத்தவரை, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களை தூண்டும் வகையிலும் அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் முழுவதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை
இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார்.
2. ஆயுத பூஜையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
3. முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர்
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்யும் விதமாக டுவிட்டர் நிறுவன சிஇஓ டுவிட் செய்தது இணையதளவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. பள்ளிக்கல்வித்துறையில் வேலை: போலி அரசாணை வழங்கி மோசடி செய்யும் கும்பல் மீது நடவடிக்கை
சென்னை பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக, போலி அரசாணைகளை வழங்கி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.