மாநில செய்திகள்

நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு + "||" + One person dies of black fungus in Nellai

நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு

நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு
நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதியவர் பலியானார்.
நெல்லை, 


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருசிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டது. இதில் ஒருசிலர் உயிரிழந்து உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே இறந்து உள்ளனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள குன்னக்குடி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5-ந்தேதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டது. கருப்பு பூஞ்சை தொற்றை அகற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதற்கிைடயே, மேலும் சில கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேட்புமனு தாக்கலுக்கு அலைமோதிய மக்கள் கூட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.
2. நெல்லையில் 800 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி
நெல்லை மாவட்டத்தில் இன்று 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
3. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா
4. நெல்லையில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
5. நெல்லை அருகே, ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.