மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of rain in Tamil Nadu for the first 3 days today - Meteorological Center Information

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சில இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால், 10-ந் தேதி (நாளை மறுதினம்), 11-ந் தேதி் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடலை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்!
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
2. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.