மாநில செய்திகள்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் + "||" + O. Panneerselvam appeals to MK Stalin to assign transport workers to work without party affiliation

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்பாவி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.


அவர்கள் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களை பழிவாங்குவது என்பது தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தொழில் உறவை சீர்குலைப்பதாகவும் அமையும்.

எனவே அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும், பணியிட மாற்றம், இலகுப்பணி, பதவி உயர்வு என அனைத்தும் விதிகளுக்குட்பட்டு நடைபெறவும் முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜி.எஸ்.டி. வரியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள்: தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை தி.மு.க. நிலைநிறுத்த வேண்டும்
பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
2. ‘டாக்டருக்குதான் படிக்க வேண்டும்’ என குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது பெற்றோருக்கு அமைச்சர் வேண்டுகோள்
‘டாக்டருக்குதான் படிக்க வேண்டும்’ என பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.
4. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
5. பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது
பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.