மாநில செய்திகள்

திருக்குவளை செல்லும் வழியில், மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின் + "||" + On the way to Thirukuvalai, MK Stalin married the couple who were waiting for the wedding at the entrance of the hall

திருக்குவளை செல்லும் வழியில், மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின்

திருக்குவளை செல்லும் வழியில், மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின்
திருக்குவளை செல்லும் வழியில் மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
திருவாரூர்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து காரில் திருக்குவளை நோக்கி சென்றார்.

திருவாரூர் அருகே பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரை சேர்ந்த சோப்ரா-ரமா ஆகியோர் முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.


திருமணத்தை நடத்தி வைத்தார்

மணக்கோலத்தில் நின்ற ஜோடியை கண்டதும் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். பின்னர் அவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருக்குவளை சென்றார். அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

திருமண மண்டப வாசலில் முதல்-அமைச்சர் தலைமையில் தங்களது திருமணம் நடந்ததால் புதுமண ஜோடி இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்
நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்.
2. 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.
3. பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது
பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்ய முயற்சி செய்ததாக, மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4. திருமணம் குறித்து நடிகை ரம்யா வெளியிட்ட ருசிகர தகவல்
நடிகை ரம்யா இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனது திருமணம் குறித்து ருசிகர தகவலை வெளியிட்டார். அந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
5. ஐதராபாத்தில் நடந்தது நடிகர் விஷ்ணு விஷால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீராங்கனையை மணந்தார்
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது.