மாநில செய்திகள்

ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக உயர்வு + "||" + Hogenakkal water level rises to 6500 cubic feet

ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக உயர்வு

ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக உயர்வு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை அடுத்த பிலிகுண்டுலு பகுதியில், தமிழககத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 6,500 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 20 நாட்களாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 3 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தமிழக எல்லை மற்றும் ஒகேனக்கல், அஞ்செட்டி உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 76.18 அடியாக உயர்ந்துள்ளது.
2. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75.29 அடியாக உயர்ந்துள்ளது.
3. ஹைதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,248 ஆக உயர்வு
ஹைதி நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,248 ஆக உயர்வடைந்து உள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.83 அடியாக உயர்ந்துள்ளது.
5. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 167 புள்ளிகள் உயர்வடைந்து உள்ளது.