இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் ஸ்டாலின் - தோப்பு வெங்கடாசலம்


இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் ஸ்டாலின் - தோப்பு வெங்கடாசலம்
x
தினத்தந்தி 11 July 2021 6:40 AM GMT (Updated: 2021-07-11T12:10:49+05:30)

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

சென்னை,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் அவரின் ஆதரவாளர்கள் 905 பேரும் திமுகவில் இணைந்தார்கள்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது:-

அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி வருகிறார். முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தது. 

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு முதல்-அமைச்சர் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story