மாநில செய்திகள்

பொதுமக்களிடம் இன்று நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் + "||" + First-Minister MK Stalin receives petitions directly from the public today

பொதுமக்களிடம் இன்று நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொதுமக்களிடம் இன்று நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் இன்று நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணைதளம் வாயிலாகவும் மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதல்-அமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி? டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் அணி, பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
2. மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்
மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் .
3. மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் பலி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 28 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி.