மாநில செய்திகள்

சென்னையில் 214 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் + "||" + 214 police inspectors transferred in Chennai

சென்னையில் 214 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னையில் 214 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
சென்னையில் 214 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலையொட்டி, 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்த டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் என பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றது.  இதனால், பணியிட மாறுதல் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலர் மீண்டும், பழைய அல்லது வேறு இடங்களை கேட்டு உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக, அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசையும் பெற்றனர்.  இவர்கள் அளித்த பணியிட மாறுதல் கோரிய மனுக்கள் பரிசீலனையில் இருந்து வந்தன.

இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் 214 காவல் ஆய்வாளர்களை பணியிட மாறுதல் செய்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.  இவர்களில் 53 பேர் பெண்கள்.  35 பேர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் ஆவர்.


தொடர்புடைய செய்திகள்

2. பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் பணியிட மாற்றம்
பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
3. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4. முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்
காரியாபட்டி தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.