மாநில செய்திகள்

பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் + "||" + Sexual harassment; Sivashankar Baba remanded in court custody for 15 days

பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக மாமல்லபுரம் மகளிர் போலீசார் முதலில் வழக்குபதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சிவசங்கர் பாபாவை கைது செய்து 3 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தனித்தனியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் 2 வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவாகி இருந்தது.

ஒரு வழக்கில் போக்சோ சட்டம் போடப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின்  தங்கையிடமும் சிவசங்கர் பாபா பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கிலும் புதிதாக அவர் மீது மேலும் ஒரு போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து 3-வதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்துள்ளதாக செங்கல்பட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் புதிதாக போடப்பட்ட போக்சோ வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள்
முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என்று சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார்.
3. சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துளது.
4. பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு!
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .