தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் 7 விருதுகள் - தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் 7 விருதுகள் - தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2021 1:16 AM GMT (Updated: 15 July 2021 1:16 AM GMT)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வழங்கப்படும் 7 விருதுகளுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வழங்கப்படும் 7 விருதுகளுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி வரும் திருவள்ளுவர் விழாவில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

விருதுகளுக்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கி, பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சிஇயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம்முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும், tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story