மாநில செய்திகள்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை + "||" + Half an hour of rain in Chennai, Kanchipuram and Tiruvallur districts

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை
சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை பெய்துள்ளது.


சென்னை,

தமிழகத்தில் பருவகால மழையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.  சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போது, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையானது அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவித்தது.

இதேபோன்று, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.  சென்னையில் கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே. நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. அசாமில் கடும் மழை; பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு
அசாம் மாநிலத்தில் கடும் மழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
5. சீனாவில் கொட்டித் தீர்த்த மழை; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு
சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலியாகியுள்ளனர்.