போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 17 July 2021 5:24 AM GMT (Updated: 17 July 2021 5:24 AM GMT)

கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையை பொறுத்தவரையில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 வீடுகள் தோறும் சென்று தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்தவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள விழுப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலமாக, டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றார். தொடர்ந்து 

போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது என்றும்,  ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.  

அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் தான் ஓ.பன்னீர் செல்வம் என்று குறிப்பிட்டார். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story