மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு + "||" + Local elections by the end of December - Minister KN Nehru

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,

கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் சென்னையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். செப்டம்பர் 15க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது.

குற்றச்சாட்டுகளை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படும் பணி விரைவுபடுத்தப்படும் என்றார்.