இடம், வீடு, வாடகை தொடர்பான பிரச்சினைகளை காவல் நிலையத்தில் விசாரிக்கப்போவது இல்லை - மதுரை போலீசார் அறிவிப்பு


இடம், வீடு, வாடகை தொடர்பான பிரச்சினைகளை காவல் நிலையத்தில் விசாரிக்கப்போவது இல்லை - மதுரை போலீசார் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 6:29 PM GMT (Updated: 2021-07-17T23:59:02+05:30)

இடம், வீடு, வாடகை தொடர்பான சிவில் பிரச்சினைகளை இனி காவல் நிலையத்தில் விசாரிக்கப்போவது இல்லை என மதுரை போலீசார் அறிவித்துள்ளனர்.

மதுரை,

மதுரையில் நில உரிமை, வீடு, வாடகைதாரர் பிரச்சினைகள் குறித்து இனி காவல்நிலையங்களில் விசாரிக்கப்போவது இல்லை என மதுரை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். இதற்காக நியமிக்கப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் தான் இது குறித்து பொதுமக்கள் முறையிட வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பான புகார்களை ஆர்.டி.ஓ.விடம் நேரிலோ அல்லது www.tenency.gov.in என்ற இணையதளத்திலோ முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம், வீடு, வாடகை தொடர்பான சிவில் பிரச்சினைகளில் போலீசார் தலையிடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் போலீசார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Next Story