சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 18 July 2021 1:30 AM GMT (Updated: 18 July 2021 1:30 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். 

அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story