மாநில செய்திகள்

தமிழகத்தில் 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona affected 2,079 people in Tamil Nadu

தமிழகத்தில் 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனாவால் 2,079 பேர் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றி சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 2,079 பேருக்கு (நேற்று 2,205 பேர்) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.  இது நேற்று முன்தினம் 2,312 ஆக இருந்தது.

இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 25,35,402 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,43,429 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதனால், இதுவரை மொத்தம் 3,55,57,967 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  நேற்று 43 ஆகவும், நேற்று முன்தினம் 46 ஆகவும் இருந்தது.  இதனால், கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து 2,743 பேர் இன்று குணமடைந்தனர்.  24,73,781 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  27,897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் 34,407 பேருக்கு கொரோனா பாதிப்பு; 643 பேர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 34,407 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்
உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து நபர் ஒருவர் விடுபட்டு உள்ளார்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
5. திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.