மாநில செய்திகள்

அரசு பஸ்சில் மகளிர் இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநில வாலிபர்களிடம் கட்டணம் வசூல் கண்டக்டர் பணி இடைநீக்கம் + "||" + Conductor suspended for giving free tickets to women on government buses

அரசு பஸ்சில் மகளிர் இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநில வாலிபர்களிடம் கட்டணம் வசூல் கண்டக்டர் பணி இடைநீக்கம்

அரசு பஸ்சில் மகளிர் இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநில வாலிபர்களிடம் கட்டணம் வசூல் கண்டக்டர் பணி இடைநீக்கம்
சேலத்தில் அரசு பஸ்சில், மகளிர் இலவச டிக்கெட்டை வடமாநில வாலிபர்களுக்கு கொடுத்து கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்,

தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இலவசமாக பயணம் செய்பவர்களை கணக்கிட வசதியாக ‘மகளிர் கட்டணம் இல்லா பயணச்சீட்டு’ என்று அச்சிடப்பட்டு டவுன் பஸ்சில் பயணிக்கும் பெண்களுக்கு கண்டக்டர்கள் அந்த டிக்கெட்டை கொடுத்து வருகிறார்கள்.


இந்த நிலையில் நேற்று காலை சேலம் ஜங்ஷனில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு 13-ம் எண் அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சில் ஆண்கள், பெண்கள் பலர் பயணித்தனர். 5 ரோடு பகுதியில் அந்த பஸ்சில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி, பயணிகளின் டிக்கெட்டை சோதனை செய்தனர்.

பீகார் வாலிபர்கள்

பஸ்சில் பயணம் செய்த பீகாரை சேர்ந்த வாலிபர்களிடம் பரிசோதனை செய்த போது, அவர்களிடம் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படும் ‘மகளிர் கட்டணம் இல்லா பயணச்சீட்டு’ இருப்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பஸ் கண்டக்டர் நவீன்குமாரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டை பீகார் வாலிபர்கள் 21 பேரிடம் கொடுத்து அதற்கு கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

பணி இடைநீக்கம்

இதையடுத்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் லட்சுமணன், கண்டக்டர் நவீன்குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.
2. விநாயகர் சதுர்த்தியையொட்டி 576 சிறப்பு பஸ்கள் இயக்கம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் வெளியூர் பயணம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து 576 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் வெளியூர் புறப்பட்டு சென்றதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
3. ராகுல் காந்தி இன்று ஜம்மு பயணம்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம்!
ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
4. ரஷியாவில் அஜித் பைக் பயணம்
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படமாக்க படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு ரஷியா சென்றனர்.
5. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.