மாநில செய்திகள்

கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பலி + "||" + Car overturns and kills 3 friends

கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பலி

கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பலி
கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரத்தைச் சேர்ந்தவர்கள் பொன்சேகர் (வயது 40), ரெனிஸ் வாலன் (27), வில்சன் ரஜினிராஜா (35), அதிர்ஷ்டபாலன், செல்வம். பக்கத்து ஊரான கல்விளையைச் சேர்ந்தவர் ஸ்டீபன்.


நண்பர்களான இவர்கள் 6 பேரும் நேற்று மாலையில் ஒரு காரில் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை ஸ்டீபன் ஓட்டினார்.

கார் கவிழ்ந்தது

மன்னார்புரம் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பொன் சேகர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் காரில் இருந்த ரெனிஸ் வாலன், வில்சன் ரஜினிராஜா உள்ளிட்ட 5 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பரிதாப சாவு

படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரெனிஸ் வாலன், வில்சன் ரஜினிராஜா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

படுகாயமடைந்த அதிர்ஷ்டபாலன், செல்வம், ஸ்டீபன் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பொன்சேகர், வில்சன் ரஜினிராஜா ஆகிய 2 பேரும் பெயிண்டர்களாக வேலை செய்து வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நண்பர்களுடன் குளித்தபோது கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி என்ஜினீயர் பலி
நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி கம்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2. கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி
கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி.
3. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி
தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதிய ஷேர்ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை, பாதிரியார் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
4. ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பஸ் மோதி காவலாளி பலி
பஸ் மோதி காவலாளி பலியானார்.