நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி


நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 19 July 2021 8:08 AM GMT (Updated: 19 July 2021 8:08 AM GMT)

கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட்தேர்வு  விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியதுபோல் கொரோனா தடுப்பூசிகள் வேண்டுமென்றே வீணடிக்கப்படவில்லை. ஆரம்ப காலக்கட்டத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மருந்துகள் வீணாகின. கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும்.

சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஏற்கெனவே பலமுறை கூறியுள்ள நிலையில் அவர் வேண்டுமென்றே பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அ.தி.மு.கவை அழித்துவிட முடியாது. சசிகலா அ.தி.மு.க.விலிருந்த காலத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்து” என்றார்

மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். நதிநீர் பங்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், கர்நாடகம் இனி காவிரியின் குறுக்கே அணைகள் தடுப்பணைகள் கட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.



Next Story