கொரோனா தடுப்பூசி: தமிழகத்திற்கு தேவை 12 கோடி; செலுத்தியது 1.8 கோடி


கொரோனா தடுப்பூசி:  தமிழகத்திற்கு தேவை 12 கோடி; செலுத்தியது 1.8 கோடி
x
தினத்தந்தி 19 July 2021 12:58 PM GMT (Updated: 19 July 2021 12:58 PM GMT)

தமிழகத்திற்கு 12 கோடி கொரோனா தடுப்பூசி தேவை என்றும் இதுவரை 1.80 கோடி பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.


சென்னை,

தமிழகத்தில் சமீப வாரங்களாக கொரோனா பாதிப்புகள் சரிவடைந்து வருகின்றன.  நேற்று 2 ஆயிரத்துக்கு சற்று கூடுதலாக எண்ணிக்கை பதிவானது.  இதேபோன்று உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறும்போது, தமிழகத்திற்கு 12 கோடி கொரோனா தடுப்பூசி தேவை. ஆனால் இதுவரை 1.80 கோடி பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது. தினமும் 7 லட்சம் வீதம் மாதம் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன.

ஆனால் தினமும் 4 முதல் 5 லட்சம் தடுப்பூசிகள்தான் கிடைக்கிறது.  அரசு வேண்டுமென்றே தட்டுப்பாடு என்று கூறவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகம். மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார்கள்.

எனவே, மத்திய அரசு 10 கோடி தடுப்பூசியை விரைவாக தந்தால் 4 முதல் 5 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.




Next Story