தெற்கு ரெயில்வே பணிகளில் 50% தமிழர்களுக்கு ஒதுக்க பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தல்


தெற்கு ரெயில்வே பணிகளில் 50% தமிழர்களுக்கு ஒதுக்க பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 July 2021 5:27 PM GMT (Updated: 19 July 2021 5:27 PM GMT)

தெற்கு ரெயில்வே பணிகளில் 50% தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை,

பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் ஆந்திரம், கா்நாடகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே துறை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 
இதன் செயல்பாட்டு எல்லையில் பெரும் பகுதி தமிழகத்தில்தான் உள்ளது. இந்த துறையில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தா் மற்றும் தட்டச்சா் பணியிடங்களில் 75% இடங்களை நேரடியாகவும், 25% இடங்களை ஏற்கெனவே பணியில் உள்ள ஊழியா்களை கொண்டும் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

மொத்தமுள்ள 80 பணியிடங்களில் தமிழகத்தின் 10 பேர் மட்டுமே தோந்தெடுக்கப்பட்டுள்ளனா். முதல் 50 இடங்களில் தமிழர்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்த பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சோந்தவா்கள் 12%  இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனா். மீதமுள்ள 88% இடங்களை பிற மாநிலத்தவா்கள் பறித்து கொண்டுள்ளனா். 

அவா்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவா்கள் தெற்கு ரயில்வேயின் செயல்பாட்டு எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோந்தவா்கள் என்றாலும் கூட, பெரும்பான்மையானவா்கள் வட மாநிலங்களை சோந்தவா்கள் ஆவா். தமிழகத்துக்கான ரெயில்வே பணியிடங்கள் வெளி மாநிலத்தவா்களுக்கு தாரை வார்க்கப்படுவது இயற்கை நீதிக்கு எதிரானதாகும்.

மத்திய அரசு பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவதுதான் அதற்கு சரியான தீா்வாகும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள கடைநிலை பணிகள் முழுவதும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 சதவீத இடங்கள் தமிழகளுக்கு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


Next Story