மதுரை ஏகநாதர் கோயிலில் தொல்லியத்துறை ஆய்வு - விரைவில் அறிக்கை தாக்கல்


மதுரை ஏகநாதர் கோயிலில் தொல்லியத்துறை ஆய்வு - விரைவில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 20 July 2021 3:00 AM GMT (Updated: 20 July 2021 3:00 AM GMT)

மதுரை ஏகநாதர் கோயிலில் கடந்த ஆண்டு பிராமி கல்வெட்டுகள் கண்டறியட்டன.

மதுரை,

மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகநாதர் கோயிலில், கடந்த ஆண்டு பிராமி கல்வெட்டுகள் கண்டறியட்டன. அதில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்த போது, அதில் இருந்த சில தகவல்களின் அடிப்படையில், இந்த கோயில் தமிழகத்தில் உள்ள முதல் பள்ளிப்படை கோவில் என தெரிய வந்தது. 

இந்த நிலையில் மத்திய, மாநில தொல்லியல்த்துறை உயரதிகாரிகள் மற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள், இந்த கோயிலையும், கோயிலில் உள்ள கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்தனர். இது குறித்த ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் நமது முன்னோர்களின் நாகரீகம் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story