மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து + "||" + In the presence of First-Minister MK Stalin With an investment of Rs 17,141 crore 35 new memorandums of understanding signed

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது.
சென்னை

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' விழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

குறிப்பாக, கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் வழியே ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பேசும் போது புதிய திட்டங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.,

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது கூறியதாவது:- 

தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மிகவும் தொன்மையானது நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அளித்து வந்துள்ளது.  தமிழ்நாடு போட்டியென்பது வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் எழுதப்படாத சட்டமாகவுள்ளது என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வி துறை சார்பில் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு
6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வி துறை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
2. உருமாறிய கொரோனாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க சென்னையில் ரூ.4 கோடியில் மரபணு பகுப்பாய்வு கூடம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உருமாறிய கொரோனாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் வகையில் சென்னையில் ரூ.4 கோடியில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
3. செப்டம்பர் 11 மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
4. எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
5. ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு நடிகர் பவன் கல்யாண் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
பிரபல நடிகரும், ஆந்திர மாநில அரசியல் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.