தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 July 2021 8:01 AM GMT (Updated: 20 July 2021 8:01 AM GMT)

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரூ இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

22, 23, 24 ஆகிய தேதிகளில் கோயமுத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

21- ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 20 முதல் 24 -ம் தேதி வரை தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20 முதல் 24ஆம் தேதி வரை கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

20 முதல் 24ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story