மாநில செய்திகள்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை + "||" + The highest number of black fungus treatment for 863 people at the Rajiv Gandhi Government Hospital in Chennai in India

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை
இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 863 பேருக்கு கருப்பு பூஞ்சை சிகிச்சை இதுவரை 342 பேர் பூரண குணம்.
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது:-

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட 863 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். அதில் 342 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


தற்போது 395 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடையின் கீழ், இவர்களுக்கான சிகிச்சைகளை ஒரே இடத்தில் அளிக்கக்கூடிய வசதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், பல தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்தும் கூட இங்கு நோயாளிகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தான் 863 பேர் கருப்பு பூஞ்சைக்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கருப்பு பூஞ்சை இறப்புக்கு இழப்பீடு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கருப்பு பூஞ்சை இறப்புக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலி- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலியானதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
3. கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு
நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
5. புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைநோய்க்கு மேலும் ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் இறந்தார்.