மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்தது தமிழகத்தில் 1,904 பேருக்கு கொரோனா + "||" + The highest incidence in 8 districts was Corona for 1,904 people in Tamil Nadu

8 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்தது தமிழகத்தில் 1,904 பேருக்கு கொரோனா

8 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்தது தமிழகத்தில் 1,904 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,904 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,094 ஆண்கள், 810 பெண்கள் என மொத்தம் 1,904 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 204 பேரும், தஞ்சாவூரில் 102 பேரும், ஈரோட்டில் 129 பேரும், சேலத்தில் 133 பேரும், சென்னையில் 141 பேரும், திருப்பூரில் 106 பேரும், செங்கல்பட்டில் 111 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட 113 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 296 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் நேற்று முன்தினத்தை விட பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

30 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 49 லட்சத்து 62 ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 83 ஆயிரத்து 709 ஆண்களும், 10 லட்சத்து 55 ஆயிரத்து 530 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 39 ஆயிரத்து 277 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 92 ஆயிரத்து 597 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 65 ஆயிரத்து 936 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 22 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 8 பேரும் என 30 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கோவையில் 5 பேரும், திருவண்ணாமலை, ஈரோட்டில் தலா 4 பேரும், சென்னையில் 3 பேரும் உள்பட நேற்று மட்டும் 16 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 782 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2,439 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 2,439 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர்.

சிகிச்சையில் 26 ஆயிரத்து 717 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 280 முதியவர்கள் உள்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 280 முதியவர்கள் உள்பட 1,957 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
முக கவசம் அணிய வேண்டும்: கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
3. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 8 பேருக்கு கொரோனா உறுதி
8 பேருக்கு கொரோனா உறுதி